அல்குர்ஆன் அறிமுகம்
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அல்லாஹுதஆலா ஆதம், ஹவ்வா(அலை) இருவரையும் பூமிக்கு இறக்கும் போது,
فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
... என்னிடமிருந்து (மனிதர்களாகிய) உங்களுக்கு வழிகாட்டுதல் வரும், என் வழிகாட்டுதலை எவர்கள் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை. மேலும் அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:38)
என்று கூறினான்.
இந்த வாக்குறுதியின்படி, மனித சமுதாயம் பெருகி கருத்து வேறுபாடுகளும் தவறுகளும் தோன்றியபோது அல்லதாஹ{தஆலா, மனிதர்களில் தான் நாடியவர்களை தன் தூதர்களாக தேர்ந்தெடுத்து நல்வழிகாட்டும் வேதங்களை அவர்களுக்கு வழங்கி அதன்மூலம் மனிதரை நல்வழிப்படுத்துமாறு பணித்தான்.
كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمْ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ
மனிதர்கள் ஒரே சமுதாயமாக இருந்தனர். அல்லாஹ் நபிமார்களை நற்செய்தி கூறுபவர்களாகவும், எச்சரிக்கையாளர்களாகவும் அனுப்பினான். மனிதர்களுக்கிடையில்- அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றிலே- சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பதற்காக வேதத்தையும் அவர்களுடன் இறக்கினான். (அல்குர்ஆன் 2:213)
அந்த வரிசையில் அல்லாஹுதஆலா தன் இறுதித் து}தராக தேர்ந்தெடுத்த முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளிய வேதமே குர்ஆன். அதுவே இறுதி வேதமுமாகும்.
அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட விதம்:
முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு நாற்பது
வயதாகியபோது தனித்திருந்து இறைவனை நினைவு கூர்வது பிரியமாய் தோன்றியது. அதன்படி மக்காவிலுள்ள ஒரு மலைக்குகையில் தனிமையில் பல நாட்கள் கழித்த பின் ஒரு நாள் வானவர் ஜிப்ரீல்(அலை) அங்கு தோன்றி திருகுர்ஆனின் அலக் என்ற அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களை படிக்கும்படிச் செய்தார். இதுவே துவக்கமாக இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களாகும்.
பின்பு, முஹம்மத்(ஸல்) அவர்களின் இருபத்து மூன்று வருட நபித்துவ காலத்தில், பல்வேறு சந்தர்ப்பங்களில், தேவைக்கும் சு10ழ்நிலைக்கும் ஏற்ப இறைவனால் வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு, அவர் மூலம் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.
குர்ஆன்
குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் ஓதுதல் என்பதாகும் - இது அதிகம் ஓதப்படக் கூடியது என்ற கருத்திலேயே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் குர்ஆனுக்கு வேறு சில பெயர்களும் உண்டு அவற்றில் சில:
வேதநூல்
பிரித்தறிவிப்பது (சத்தியம் அசத்தியத்தை)
உபதேசம்
ஒளி
வழிகாட்டி
மேலும் பல பண்புப் பெயர்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.
குர்ஆன் இறுதி வேதம் என்பதற்கான தகுந்த காரணங்கள்:
1) அல்குர்ஆனுக்கு முந்தைய வேதங்களில் முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகையைப்பற்றி கூறப்பட்டிருந்ததால் எல்லா மதத்தினரும் இறைவனின் இறுதித் தூதரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அரபுமக்கள் அல்குர்ஆனுக்கு முன்பு எந்த வேதமும் கொடுக்கப்படாதவர்களாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் வேதங்கள் கொடுக்கப்பட்ட யூதர்களிலோ அல்லது கிருஸ்துவர்களிலோ இறைவனின் இறுதித் து}தர் தோன்றி இறுதிவேதம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் வேதமே கொடுக்கப்படாத அரபுக்களை நீதியாளனாகிய இறைவன் (வேதம் கொடுத்து) நல்வழிப்படுத்தாமல் விட்டுவிட வேண்டும் என்றும் சரியான சிந்தனை உள்ள மனிதர்கள் சொல்லமாட்டார்கள்.
மற்ற இனத்தவர்களுக்கு வேத வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டும் வழிகேட்டில் வாழ்ந்து கொண்டிருக்கையில் வேதமே வழங்கப்டாத அரபுகள் மிகவும் வழிகேட்டில் மூழ்கிக்கிடந்தனர். அதனை அவர்களும் அறிந்திருந்தார்கள்.
وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ - أَنْ تَقُولُوا إِنَّمَا أُنزِلَ الْكِتَابُ عَلَى طَائِفَتَيْنِ مِنْ قَبْلِنَا وَإِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ - أَوْ تَقُولُوا لَوْ أَنَّا أُنزِلَ عَلَيْنَا الْكِتَابُ لَكُنَّا أَهْدَى مِنْهُمْ فَقَدْ جَاءَكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ
நாம் இறக்கி வைத்துள்ள இந்த வேதம் பாக்கியம பொருந்தியதாகும். அதனைப் பின்பற்றுங்கள்...(இதனை அரபியில் இறக்கியதற்கான காரணம்)
வேதம் இறக்கப்பட்டதெல்லாம் எங்களுக்கு முன் இரண்டு பிரிவினருக்குத்தான். நாங்கள் அவர்களிடம் படிக்கத் தெரியாதவர்களாயிருந்தோம் என்றோ அல்லது எங்கள் மீது வேதம் இறக்கப்பட்டிருந்தால் நாங்கள் அவர்களை விட அதிகம் நல்வழி நடப்பவர்களாய் இருந்திருப்போம் என்று சொல்கிற காரணத்தினால்..... (அல்குர்ஆன் 6:155, 156, 157)
ஆகவே இறுதிவேதம் அரபியில் இறக்கப்படுவதே நியாயம்.
2) அரபுக்கள் கீழை தேசத்தவரோடும் மேலை தேசத்தவரோடும் சம அளவிலே தொடர்புடையவர்களா இருந்தனர் - இருக்கின்றனர். இறுதி வேதம் என்பது உலகமக்களுக்கு எல்லாம் பொது வேதமாகவும் இருக்க வேண்டும். ஆகவே இறைவனின் இறுதி வேதம் பொது மறை உலகின் மத்திய பகுதியில் கிழக்கிலும் மேற்கிலும் சம அளவில் தொடர்புகொண்டுள்ள இனத்தில், மொழியில் இருப்பதே முறை. அரபுக்கள் அத்தகைய இனத்தவராகவும் அரபி மொழி அத்தகைய மொழியாகவும் உள்ளது.
3) முந்தைய வேதங்கள் இறக்கப்பட்ட மொழிகளெல்லாம் சில இல்லாமல் போய்விட்டன. சில குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கின்றன. ஆனால் திருகுர்ஆன் இறக்கியருளப்பட்டுள்ள மொழியாகிய அரபிமொழி உலகின் எல்லாப் பகுதியிலும் பரவலாக எல்லா இனத்தவராலும் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.